‘காலா’ படத்தில் நடித்த நாயை வாங்கி வளர்க்க ரசிகர்கள் ரூ.2 கோடி வரை விலை பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன் நடித்த இந்த நாய்க்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.
விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் தெரிவித்தனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது. அந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். ரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் அதனை விலைக்கு கொடுக்க விரும்பவில்லை.
