இளையராஜா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்
ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றிய இளையராஜா, முதன்முறையாக ஹூஸ்டனில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.
இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்து சுமார் 7 ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ள இளையராஜா, சிம்பொனி இசையிலும் தனது சாதனையை பதிவு செய்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர்களான சித்ரா, மனோ, ஹரிச்சரண், ராகுல் நம்பியார், சரத், சந்தோஷ் உள்ளிட்டோர் தங்களது குரல் வளத்தால் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
