அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் உத்தரபிரதேசத்தில் முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார். அதனால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்காக வேட்பு மனுவில் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதால் ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அமிதாப்பச்சனுக்கும் தனக்கும் ரூ.460 கோடி அசையா சொத்துக்களும் ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அமிதாப்பச்சனிடம் ரூ.36 கோடிக்கு நகைகளும் தன்னிடம் ரூ.26 கோடிக்கு நகைகளும் இருப்பதாகவும் இருவருக்கும் ரூ.13 கோடியில் 12 கார்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
