ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கு வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை. திருமணம் ஆனதால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
இதனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
