மீண்டும் பிரபுதேவாவுடன் நயன்தாரா இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபுதேவா இயக்க இருக்கும் புதிய படத்தில் அஜித் கதாநாயகனாகவும், நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
காதலராக இருந்து பிரிந்த பிரபுதேவாவும் நயன்தாராவும் எப்படி இணைவார்கள் என்று அனைவருமிடையே கேள்வி எழும் நிலையில், தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு, சிம்புவுடனான காதல் முறிந்த பிறகும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடித்தார். அது போல தான் இதுவும் என பிரபுதேவா கூறினார்.
