Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இந்தியன் 2 படத்தின் பெஸ்ட் லுக்

இந்தியன் 2 படத்தின் பெஸ்ட் லுக்

1 minutes read

இந்தியன் 2 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்ரை படக்குழு வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்கு பின்னர் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது.

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் கையாண்டிருந்த வர்மக்கலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போதைய பெஸ்ட் லுக் போஸ்டரிலும் கமல்ஹாசன் வர்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More