Thursday, August 13, 2020

இதையும் படிங்க

மிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா?

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...

நடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு...

ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? | செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். மகேஷ் பாபு - விஜய்சமூக வலைதளங்களின்...

பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்

பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான...

திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பலியானார்

தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.

ஆசிரியர்

பொன்மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்

திரைப்படம்    பொன்மகள் வந்தாள்
நடிகர்கள்    ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி
ஒளிப்பதிவு    ராம்ஜி
இசை    கோவிந்த் வசந்தா
இயக்கம்    ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்.

கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே இப்போது அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் ஜே. ஜே. ஃப்ரெட்ரிக்கிற்கு இது முதல் படம்.

ஊட்டியில் 2004ல் குழந்தை கடத்திவந்த ஜோதி என்ற பெண், இரண்டு இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறாள். பிறகு அவளைக் காவல்துறை என்கவுன்டர் செய்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஊரில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருகிறார்.
அந்த வழக்கில் ஜோதியின் சார்பில் ஆஜராகிறாள் பெத்துராஜின் மகள் வெண்பா (ஜோதிகா). விசாரணை நடக்க நடக்க, ஜோதியின் உண்மையான கதை மெல்ல மெல்ல வெளியாகிறது.

ஒரு நீதிமன்ற த்ரில்லராக உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். பிறகு, இதையே ஒரு உருக்கமான கதையாகவும் சொல்ல விரும்பியிருக்கிறார். இதனால், நீதிமன்ற பகுதியும் ஏனோதானோவென அமைந்துவிட்டது; உருக்கமான பகுதியும் நெஞ்சைத் தொடவில்லை. கடைசியில் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லி படத்தை முடிக்கிறார்.

2004ல் முடிந்த ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரவைக்க ஒரு வலுவான ஆதாரம் தேவை. அப்படி எந்த ஆதாரமும் இல்லாமல், அப்போதுதான் துவங்கி நடக்கும் ஒரு வழக்கைப் போல நீதிமன்ற நடவடிக்கைகள் அமைகின்றன. அதற்குப் பிறகும் புத்திசாலித்தனமான விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் என சுவாரஸ்யமாக நகராமல், ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே நகர்கிறது படம்.

பல இடங்களில் நீதிமன்றத்தில் இருந்தபடி வழக்கறிஞர் வெண்பா ஒரு நீண்ட கதையைச் சொல்கிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரே சோர்ந்துபோய் நின்றுவிடுமளவுக்கு அந்தக் காட்சி அமைந்துவிடுகிறது.
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குதான் படத்தின் முதுகெலும்பு எனும் நிலையில், அந்த காட்சிகள் சொதப்பிவிட்டதால் மீதமுள்ள கதை ஏதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்தக் கதையில் நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் அடிப்படையில் நேர்மையான நபர். ஆனால், தன் மகளின் திருமணத்திற்கு ஊர்ப் பெரிய மனிதரான வில்லனை வரவழைக்க வேண்டுமென்பதற்காக, லஞ்சம் வாங்குபவராக மாறிவிடுகிறாராம். அதுவும் அடுத்த நாள் அந்த வில்லன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலையில் இந்த முடிவை எடுக்கிறாராம் நீதிபதி. பிறகு நண்பர் வந்து திட்டவும் திருந்திவிடுகிறார். எதற்கு இந்தக் காட்சி? இதனால் கதையில் என்ன மாறிவிட்டது?

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகிய மூவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் தியாகராஜன் ரோபோ மாதிரி வந்துபோகிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் வெளிப்புறக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசை ஓகே ரகம்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு த்ரில்லர் மூலம் சொல்ல விரும்பியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அழுத்தமான திரைக்கதை இல்லாததால் பெரிய தாக்கம் எதையும் படம் ஏற்படுத்தவில்லை.

 

நன்றி : Papiksha Joseph | வெப்துனியா

இதையும் படிங்க

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...

சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? | அமிதாப் வேதனை

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...

தொடர்புச் செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

உருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...

துயர் பகிர்வு