தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. வெள்ளித்திரையை போல் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வந்த இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜி, புதிதாக பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
புதிய காரின் அருகே எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாடி பாலாஜி “காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜிக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.