“மெனிகே மஹே ஹிதே” கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டது

இலங்கையின் சிங்கள மொழி பாடலான “மெனிகே மஹே ஹிதே”  (Manike Mage Hithe) என்ற பாடல் கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டுள்ளது.

யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 4 மாதங்களில் 110 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் முதல் இன்ஸ்டாகிராமர்கள் வரை  அனைவரும் இந்த பாடலின் ரசிகர்களாகியுள்ளார்கள்.

அவர்களில் சிலர் தங்கள்  வீடியோக்களில் பாடலை பின்னணி இசையாகக் கொண்டுள்ளனர், சிலர் அதற்கு நடனமாடியுள்ளனர், ஏனையவர்கள் வெறுமனே டியூன் செய்துள்ளனர்.

வைரலான சிங்களப் பாடலின் தற்போதைய பதிப்பு கடந்த மே வெளியிடப்பட்டது. இலங்கை ரப் பாடகர்கள் யொஹானி மற்றும் சதீஷன் ஆகியோரால் பாடப்பட்டது. அவர்கள் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்கள்.

குறித்த பாடல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில்,

இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவர் யொகானி திலோக்கா டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிகதடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகேஹிதே’ பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன்  மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது.

இது,பல்லாயிரம் ஆண்டுகள்  பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்