Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்!

1 minutes read

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் ஹீரோயினாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்‌ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டாக்டர் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் ‘முகிழ்’ படமும் ரிலீசாக உள்ளது. இப்படம் அக்டோபர் 8-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் நடிகர், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா, இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More