செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அஜித் பட தயாரிப்பாளருடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்த ஹிப்ஹாப் ஆதி

அஜித் பட தயாரிப்பாளருடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்த ஹிப்ஹாப் ஆதி

1 minutes read

ஏ.ஆர்.கே.சரவன் இயக்க உள்ள பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளது.

ஏ.ஆர்.கே.சரவன்

ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி, தற்போது மூன்றாவது முறையாக அந்நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.