நடிகர் அஜித்குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
பொங்கலுக்கு வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன .