செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பாரதி கண்ணம்மாவில் இனி வெண்பாவாக நடிக்கப் போவது குக்வித் கோமாளி பிரபலம்

பாரதி கண்ணம்மாவில் இனி வெண்பாவாக நடிக்கப் போவது குக்வித் கோமாளி பிரபலம்

1 minutes read


தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரிந்து வாழும் கணவன் மனைவியின் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.

மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பது வில்லி என்னும் வெண்பா கேரக்டர். அத்தோடு இந்த சீரியலில் வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரினா.இவர் இதற்கு முதல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இதனைத் தொடர்ந்தும் பல சீரியல்களில் நடித்து வந்தார். எனினும் வெண்பா கதாப்பாத்திரமே இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

VJ Manimegalai Skin Tanned, Vijay TV VJ Manimegalai - 2 மாதங்களாக கிராமத்து  வாழ்க்கை: கறுத்துப் போன மணிமேகலை

மேலும் இந்த வெண்பா கதாப்பாத்திரம் இல்லை என்றால் இந்த சீரியல் வெற்றிப் பயணத்தை நோக்கி செல்லவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இவர் தற்பொழுது கர்ப்பமா இருப்பதால் பிரசவத்திற்குப் பிறகும் சீரியலில் நடிப்பாரா எனப் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரினாவிற்கு பதில் வெண்பா கேரக்டருக்கு தற்போது விஜே மணிமேகலை அல்லது பிக் பாஸ் சீசன்4 போட்டியாளர் அனிதா சம்பத் நடிக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது

மேலும் பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி அழுதபடி இருந்த அனிதா இப்போது வில்லி வெண்பா வாக உருமாற போகிறார். இவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? அத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய மணிமேகலைக்கு வெண்பா கதாபாத்திரம் சுத்தமாக செட்டாகாது.இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடம் இருந்து வெளிவராத நிலையில் பரினாவே தொடர்ந்து நடிப்பாரா என்று மக்கள் ஆர்வமுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.