சமுத்திரக்கனி – யோகி பாபு இணையும் யாவரும் வல்லவரே படத்தின் முன்னோட்டம்

சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்துக்கு ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டு வைத்தார். 

‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘இந்தியன் 2’, ‘அந்தகன்’, ‘டான்’, ‘ரைட்டர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. தமிழ், தெலுங்கு என பிஸியான நடிகராக வலம் வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் மற்றொரு தமிழ்ப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

பிரபு திலக் வழங்க, ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ‘யாவரும் வல்லவரே’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். 4 வெவ்வேறு கதைகளை இணைத்துச் சொல்லும் வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளது.

இதில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜெய்ஸ், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பாடல்களை பொன்முத்து, ஆதிரை, தீபச்செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

ஆசிரியர்