கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமார் நல்லடக்கத்திற்கு பிறகு, நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்… Rest in peace my child’ என்று உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.