Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ஆர்ஆர்ஆர்’ உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல்

‘ஆர்ஆர்ஆர்’ உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல்

1 minutes read

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.

 
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், முதல் நாள் விவரத்தை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல் செய்திருப்பதாக ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More