Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

1 minutes read

இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருப்பதாக நடிகை மும்தாஜ்,  அவரது இணைய பக்கத்தில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டு, செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

‘அஷ்டவதானி’ டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் 1999 ‌ஆம் ஆண்டில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.

அதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான ‘குஷி’ படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்து, இன்று வரை இளம் தலைமுறை ரசிகர்களின் மனதில் கவர்ச்சி நடிகையாகவே இடம் பிடித்திருப்பவர்.

ஒரே ஒரு பாடலுக்கான நடனம் – குணச்சித்திர வேடம்-நகைச்சுவை கதாபாத்திரம்-  தயாரிப்பாளர்- பிக் பொஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்… என பல அவதாரங்களை எடுத்து, இன்றுவரை தமிழ் திரையுலகில் கலை சேவை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேல் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு, அவரைத் தேடி வரும் வாய்ப்புகளில் தனக்கு ஏற்ற வேடங்களை மட்டும் தெரிவு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் ‘வளையம்’ எனும் ஒரேயொரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இஸ்லாமியரான அவர், அடிப்படை கடமைகளில் ஒன்றான புனித பூமியாக கருதும் மெக்கா மற்றும் மதினாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர், ” அல்ஹம்துலில்லாஹ். இறுதியாக இந்த பூமியில் எமக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு பயணம் செய்கிறேன். இந்த உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இருப்பினும் இதயபூர்வமான நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார். ‌

இதனிடையே அவரது இந்த புனித பயணத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More