செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஊரெழு பகியின் இயக்கத்தில் “செல்ல குட்டி” பாடல்

ஊரெழு பகியின் இயக்கத்தில் “செல்ல குட்டி” பாடல்

1 minutes read

”இனிய நிலா மியூசிக்” கே.எஸ்.ரமணன் தயாரிப்பில் ஊரெழு பகியின் இயக்கத்தில் “இளந்தாரி” புகழ் ஸ்ரீ நிர்மலன் இசையில் வெளிவந்துள்ள பாடல் “செல்ல குட்டி”.

இந்தப்பாடலை பின்னணிப்பாடகர் முகேஷ் மொஹமட் மற்றும் ரேணு சிவகுமார் ஆகியோர் பாடியிருப்பதுடன் ராப் வரிகளை ஸ்ரீ நிருஷன் பாடியுள்ளார். கே.எஸ்.ரமணன் கவி வரிகளை எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கு அருமையாக நடன இயக்கத்தை அமைத்து இயக்கியுள்ளார் ஊரெழு பகி. கூடவே ருவித்தாவுடன் இணைந்து பாடலின் நாயகனாகவும் நடித்துள்ளார். ஒளிப்பதிவினை வட்சன் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

கலை இயக்கம் டேறியன், ஒப்பனை ருவித்தா மற்றும் நிவேந்தனா. உதவி இயக்குனர்கள் நிதர்ஷ் மற்றும் சுமன். VIBRATE DANCE GROUP மற்றும் SWAG DANCE ACADEMY ஐச் சேர்ந்தவர்கள் நடனக்கலைஞர்களாக அணி சேர்த்திருக்கிறார்கள்.

3 வெவ்வேறு லொகேஷன்கள் 3 விதமான ஆடை அணிகலன்கள் என பாடல் காட்சிப்படுத்தலுக்காக நிறையவே மினைக்கெட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் கலை இயக்கமும் நன்றாகவே இருக்கின்றது.

இந்தப் பாடலின் சரணங்களில் ஒரே டேக்கில் சில காட்சிகளை எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வட்ஷூ. அவருடன் போட்டி போட்டு நடனத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள் பகி மற்றும் குழுவினர். ஒரே டேக்கில் செல்லக்கூடிய நீளமான காட்சிகளை வட்ஷூ தனது அண்மைய பாடல்கள் பலவற்றிலும் செய்திருக்கின்றார்.

ஸ்ரீ நிர்மலன் – ஊரெழு பகி – ருவித்தா “இளந்தாரி” தந்த கூட்டணி. இந்தப்பாடலும் அந்தப்பாடலுக்கு சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.