Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியீடு

விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியீடு

1 minutes read

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழில் வெளியான ‘தோழா’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘வாரிசு’.

இதில் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தானா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன், நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், வி டி வி கணேஷ், ஜோன் விஜய், பரத் ரெட்டி, சஞ்சனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், ‘தீ தளபதி..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் வெளியாகி இணைய உலகில் புதிய சாதனையை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையின் உயிர் நாடியாக விளங்கும் அம்மா எனும் உறவை குறித்து இடம்பெற்ற ‘ ஆராரிரோ கேட்குதம்மா..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, ‘சின்ன குயில்’ சித்ரா பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே இந்த திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு டிசம்பர் 24ஆம் திகதியன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More