0
தமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் இடம்பெற்ற ‘டவுலத்தான ரவுடி..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி, லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘காதர் பாட்ஷா என்ற முத்தராமலிங்கம்’.
இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், ஆர்கே விஜய முருகன், அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துக்காக டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘தௌலத்தான ரவுடி..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர்களான காஞ்சனா லோகன் மற்றும் ஜூனியர் நித்யா ஆகியோர் எழுத, பாடகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார், காஞ்சனா லோகனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.
துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்த பாடல், இளைய தலைமுறை கொண்டாட்ட பாடலாக அமைந்திருக்கிறது.
செய்திகள்
புகைப்படத் தொகுப்பு
ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ பட பாடல் வெளியீடு
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNEL
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW