Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

1 minutes read

நடிகர் விமல் கதையின் நாயகனாக நடிக்கும் ‘குலசாமி’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், நடிகருமான அமீர், முன்னாள் தமிழக காவல்துறை தலைவரும், நடிகருமான எஸ். ஆர். ஜாங்கிட் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இயக்குநரும், நடிகருமான சரவண சக்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலசாமி’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், தான்யா ஹோப், போஸ் வெங்கட், குட்டி புலி சரவண சக்தி, எஸ். ஆர். ஜாங்கிட், வினோதினி வைத்தியநாதன், கர்ண ராஜா ,மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா, லாவண்யா, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வைட் ஆங்கிள் ரவி சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ ஸ்டார் மகாலிங்கம் இசையமைத்திருக்கிறார். அண்ணன்- தங்கை உறவு குறித்து புதுமையான திரைக்கதை வடிவத்தில் தயாராகி இந்த திரைப்படத்தை மிக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் இயக்குநரும், நடிகருமான சரவண சக்தி பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவம் போன்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி அண்ணன்- தங்கை உறவை மையப்படுத்தி இந்த ‘குலசாமி’ படத்தின் திரைக்கதையை எழுதினேன். இதற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வசனம் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு விமல் மேலும் உயரத்தை எட்டுவார். இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரித்த தயாரிப்பாளருக்கும், படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் சஞ்சித் சிவாவிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More