Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எவ்வளவு நல்ல மனுஷன்ப்பா அஜித் | மதுரை மோகன்

எவ்வளவு நல்ல மனுஷன்ப்பா அஜித் | மதுரை மோகன்

1 minutes read

எவ்வளவு நல்ல மனுஷன்ப்பா அஜித்.  அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று  நான் அஜித் சாருடன் ‘சிட்டிசன்’ படப்பிடிப்பில் மற்ற நடிகர்களின் மேக்கப் உதவியாளர்கள் குறித்த நேரத்தில் வந்துவிட்டார்.

ஆனால், அஜித்திற்கு மேக் அப் போடும் மேக்கப் உதவியாளர் வரவே இல்லை. இதனால், படப்பிடிப்பு தாமதம் ஆனது.

ரொம்ப நேரமாக அஜித் காத்துக்கொண்டிருக்க, மேக் அப் மேன் வியர்த்து ஓடி வந்தார். அப்போது, அஜித் அவரிடம் ஏங்க லேட்டா வந்தீங்க என்று கேட்டார்.

அந்த மேக் அப் மேன் சார்… நான் ரொம்ப தூரத்திலிருந்து வாரேன். 2 பஸ் மாறி மாறி வரணும். அதனாலதான் சார் லேட் என்று கூறினார்.

இதைக் கேட்ட அஜித், என்ன சொல்றீங்க… உங்ககிட்ட பைக் இல்லையா என்று கேட்டார். அதற்கு அந்த மேக் அப் மேன் சார்… இல்லை சார்… இதன் பிறகு அவர் மேக் அப் போட்டு முடிக்க, சில மணி நேரத்தில் புது ஹீரோ ஹோண்டா பைக்கின் சாவியை அஜித் அவரிடம் கொடுத்தார். இதைப் பார்த்த அந்த மேக்அப் மேன்னுக்கு என்ன செய்வது என்று அறியாமல் அந்த சாவியை திருப்பி அஜித்திடமே கொடுத்துவிட்டார்.

அப்போது, அஜித் என்னப்பா.. உனக்கு பைக் வேண்டாமா என்று கேட்க, சார் ஒரு நிமிடம் என்று கூறி அஜித் காலில் விழுந்துவிட்டு சாவியை வாங்கினார் அந்த மேக் அப் மேன். அப்போ… முதுகை தட்டி இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று அஜித் கூறி அவரை அனுப்பி வைத்தார். எப்படிப்பட்ட மனித மனிதர் அஜித் என்று மதுரை மோகன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More