Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ புதிய போஸ்டர்

ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ புதிய போஸ்டர்

1 minutes read

மலையாளத்தின் முன்னணி நடிகரும் ‘மொழி’, ‘ராவணன்’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான பிரித்விராஜ்,  தற்போது மலையாள மொழியில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்துள்ளார்.

பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பிளஸ்சி இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனை பற்றிய கதையை கொண்டமைந்த இந்த படத்தில், பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானதையடுத்து, படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளமை ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருப்பதோடு, சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More