Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி – கத்ரினா படம்

குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி – கத்ரினா படம்

0 minutes read

விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் முன்னோட்டம் புதன்கிழமை (20) வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

காதல் படமா, திகில் படமா, மர்மப் படமா என்ற சுவாரசியமான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த முன்னோட்டத்தில், விஜய் சேதுபதி – கத்ரினாவின் இணக்கமான நடிப்பு பார்ப்பவர்களை இரசிக்கும்படி செய்திருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பன்மொழிப் படத்தின் ஹிந்தி உருவாக்கத்தில் சஞ்சய் கபூர், வினய் பதக், ப்ரதிமா கண்ணன், டினு ஆனந்த், கௌரவ வேடத்தில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இதேவேளை, இந்தப் படத்தின் தமிழ் உருவாக்கத்தில் ராதிகா சரத்குமார், ஷண்முகராஜா, கவின் ஜே பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் மற்றும் அஷ்வினி கல்சேகர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ப்ரீதம்.

தலைப்பு கிறிஸ்மஸ்ஸுடன் தொடர்பு பட்டிருந்தாலும் படம் வெளியாகவிருப்பது ஜனவரி 12ஆம் திகதிதான்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More