செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

1 minutes read

‘குடும்பத்தின் மேன்மைக்காக அயராது உழைக்கும் தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் இடையேயான உறவு சார்ந்த இடைவெளியை உணர்வுபூர்வமாக விவரிப்பது தான் மெட்ராஸ் மேட்னி’ என அப்படத்தின் இயக்குநரான கார்த்திகேயன் மணி தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன் , ஷெல்லி, விஷ்வா, ஜோர்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, சாம்ஸ் , கீதா கைலாசம்,  ரமேஷ் திலக்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார்.  மத்திய தர வர்க்கத்து மக்களின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்குபற்றினர்.

படத்தின் இயக்குநர் பேசுகையில், ” தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினாலும்.. சினிமா மீது குறையாத பற்று இருந்தது. இதன் காரணமாக சினிமா பற்றிய விடயங்களை தன்னெழுச்சியாக கற்றுக் கொண்டேன். மேலும் எம்முடைய தாயாரின் தமிழ் மொழி வரலாறு மற்றும் தமிழர்களின் வரலாறு குறித்த அறிவு பகிர்தலால் இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். நான் சந்தித்த.. கேட்ட.. அனுபவங்களை வைத்துத்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். குடும்பத்தை உருவாக்கும் தலைவர் குடும்பத்தின் மேன்மைக்காக ஓயாது ஓடி ஓடி உழைக்கிறார் . அவர் திரும்பி பார்க்கும் போது அவருடைய வாரிசிற்கும் , அவருக்கும் இடையே உறவு மேலாண்மையிலும், புரிதலிலும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக தந்தைக்கு ஏற்படும் மன வலியை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி உள்ளார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.