செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம் ‘படத்தின் டீசர் வெளியீடு

1 minutes read

‘ஒரு நொடி ‘படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் தமன்- தனது பெயரை தமன் அக்ஷன் என மாற்றி வைத்துக் கொண்டு, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜென்ம நட்சத்திரம் ‘ எனும் திரைப்படத்தில் தமன் அக்ஷன்,  மால்வி மல்கோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி , ‘தலைவாசல்’ விஜய், சந்தான பாரதி ‘பொய்ஸ்’ ராஜன், யாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே. ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட் லாம்ப் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. சுபாஷிணி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வழங்குகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பேய் படங்களுக்கு உரிய டெம்ப்ளேட்டான காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் அதற்கான ரசிகர்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More