செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோகோட்’

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோகோட்’

1 minutes read

நிதி சிக்கல் காரணமாக சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகி வரும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும், ‘கராத்தே பாபு ‘படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்படுவதாலும், இடைப்பட்ட காலத்தில் மதிப்பு மிகுந்த தன்னுடைய கால்ஷீட்டை மற்றவர்களுக்கு வழங்காமல் நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக இரண்டு வெற்றி படங்களை வழங்கிய கார்த்திக் யோகி சொன்ன கதையை கேட்டு புதிய படத்தை தயாரித்து, நடிக்க தொடங்கி இருக்கிறார் ரவி மோகன். இவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘ ப்ரோகோட்- (BroCode)’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன், எஸ். ஜே. சூர்யா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் முன்னணி நடிகைகள் நால்வர் நடிக்கிறார்கள்.  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். கொமடி என்டர்டெய்னராக தயாராகும்  இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பிரபல நடிகைகளை தயாரிப்பு தரப்பு தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், யார் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்? என்ற விவரத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கி… ஒரே கட்டமாக நிறைவு செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.