செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காயல் ‘ படத்தின் ப்ரீ ட்ரெய்லர் வெளியீடு

1 minutes read

சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்கள் பார்வையாளர்களை கவர்வதற்கு வித்தியாசமாக ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்பது கிட்டத்தட்ட கட்டாயமாகி விட்ட சூழலில் ‘ காயல்’ படக் குழுவினர், படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு முன்னரே அதற்கொரு அறிமுக குறு முன்னோட்டத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்துள்ளனர்.

இயக்குநர் தமயந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ காயல் ‘ திரைப்படத்தில் லிங்கேஷ், காயத்ரி, அனு மோல்,  ரமேஷ் திலக்,  ஸ்வகதா கிருஷ்ணன், ஐசக் வர்கீஸ், ஆர் ஜே பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் கண்ணையா இசையமைத்திருக்கிறார் . உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு குறு முன்னோட்டத்தை அறிமுக காணொளியை வெளியிட்டுள்ளனர். கதையின் நாயகனான நடிகர் லிங்கேசின் பின்னணி குரலில் விவரிக்கப்படும் காணொளியில் இப்படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்த விபரங்கள் இடம் பிடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார்- நடிகர் யோகி பாபு – ‘நீயா நானா’  கோபிநாத் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்த குறு முன்னோட்டம்-  காதல் இல்லாத காதல் கதை என்றும், பெண் இயக்குநரான தமயந்தியின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் இப்படம் தயாராகி இருப்பதாலும் படத்தை காண வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.