செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

0 minutes read

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன் பாப், தனது 71 ஆவது வயதில் காலமானார்.  அவர் கடந்த சில காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மதன் பாப்வின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘வானமே எல்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

‘தேனாலி’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘ரெட்’ போன்ற பல படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.