சிக்கன் வறுவல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் சிக்கன் வறுவல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிக்கன் வறுவல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை : சிக்கன் வறுவல்

 • Step 1.

  முதலில் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் வைக்க வேண்டும்.

 • Step 2.

  பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

 • Step 3.

  பின்பு அதில் மீதி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

 • Step 4.

  அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி போட்டு 20 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

 • Step 5.

  சிக்கன் வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளரி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெடி.

   

  நன்றி : அறுசுவை சமையல்

ஆசிரியர்