தேவையான பொருட்கள்:
பூண்டு – 10 பற்கள்
சின்ன வெங்காயம் – 12
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான பூண்டு குழம்பு ரெடி!
நன்றி-தினகரன்