தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மிளகாய் – 10
கடலைமாவு -150 கிராம்
அரிசி மாவு -50 கிராம்
ஓமம் -கால் சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
சீஸ் ஸ்லைஸ் – 4
பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் – 50 கிராம்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
பக்குவம்:
கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும். பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி.