தேவையானவை:
கருங்கோழி – 300 கிராம்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சைமிளகாய் – 5,
பூண்டு – 5 பல்,
இஞ்சி – 1 துண்டு,
துவரம்பருப்பு – 30 கிராம்,
பட்டை, கிராம்பு,
ஏலக்காய் – 10 கிராம்,
சோம்பு,
சீரகம்,
காய்ந்தமிளகாய்,
மிளகு – தலா 10 கிராம்,
தக்காளி – 100 கிராம்,
கொத்தமல்லி,
புதினா – 1/2 கட்டு,
கறிவேப்பிலை,
உப்பு – தேவைக்கு,
நல்லெண்ணெய் – 250 கிராம்.
பக்குவம்:
நாட்டுகோழியை போல தான் கருங்கோழியில் சற்று கடினமான தசை பகுதிகள் இருக்கும். உரலில் போட்டு எழும்பு நொருங்க இடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு ஆகியவையும் அதே உரலில் இடித்து வைக்கவும். கடாயில் சோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், இவைகளை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
தனியாக ஒரு சட்டியில் நல்லெண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, இடித்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு கலவை போட்டு நன்கு வதக்கி, இடித்த கருங்கோழியை போட்டு நன்றாக வதக்கவும். பின் அரைத்த மசாலா பொடி, தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, தண்ணீர் 2 லிட்டர் ஊற்றி கொதிக்க விடவும். கோழியும், துவரம்பருப்பும் நன்கு வெந்து தண்ணீர் 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.
நன்றி -தினகரன்