உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி குழம்பு அல்லது மசாலா செய்து சாப்பிடுவதால் சலிப்பா?
அப்படியானால், இந்த முறை இந்த புதிய முறையில் முட்டை கிரேவி செய்து பாருங்கள். இது க்ரீமியாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். சாதத்தோடு மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் அருமையாக சேரும்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் – 2
முந்திரி – 10
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
முட்டை ப்ரை செய்வதற்கு:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
வேக வைத்த முட்டை – 6
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 5
சோம்பு – ¼ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
புளிப்பில்லாத கெட்டி தயிர் – ¼ கப்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – அலங்கரிக்க சிறிது
செய்முறை
மசாலா அரைப்பது:
மிக்சியில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து வைக்கவும்.
முட்டை ப்ரை செய்வது:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்த முட்டைகளை ஆங்காங்கு கீறி சேர்த்து, சிறிது நேரம் ப்ரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
தாளிப்பது:
மற்றொரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் வதக்கல்:
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நிறம் வரும் வரை வதக்கவும்.
மசாலா சேர்த்தல்:
இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
மசாலா தூள் சேர்த்தல்:
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி எண்ணெய் பிரியும்வரை கிளறவும்.
தயிர் சேர்த்தல்:
புளிப்பில்லாத தயிரை அடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
கிரேவி தயார் செய்வது:
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
முட்டை சேர்த்தல்:
பின்னர் ப்ரை செய்த முட்டைகளை சேர்த்து, மேலும் 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
அலங்காரம்:
இறுதியாக கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான க்ரீமி முட்டை கிரேவி தயார்!
இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா — எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். 😋