அமெரிக்கா – டென்வர் (Denver) சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA-3023,மியாமிக்கு (Miami) நேற்று (27) புறப்படத் தயாராகியது.
அப்போது தரையிறங்கும் கியர் பழுதடைந்ததால், டயர் தீப்பிடித்தது. இதனால் ஓடுபாதையில் அடர்த்தியான புகை கிளம்பியது.
விமானி எச்சரிக்கையான உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 173 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாய் விமானத்தில் சறுக்குகள் அமைக்கப்பட்டுப் பயணிகளும் 6 விமான ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அமெரிக்கன் ஏர்லேன்ஸ் நிறுவனம் கூறியது.
வீடியோ : விமானத்தில் சறுக்குகள் அமைக்கப்பட்டு 173 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்
அவர்களில் 5 பேர் காயமுற்றதாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அமெரிக்கன் ஏர்லேன்ஸ் நிறுவனம் கூறியது.
பயணிகள் வெளியேறிக்கொண்டிருந்த போதே, தீ கட்டுப்படுத்தப்பட்டதாக டென்வர் தீயணைப்புத்துறை கூறியது.