செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு வாகனங்களை நிறுத்திவிட்டு, என்ஜினை அணைக்காமல் இயங்கவிட்டால் 150 பவுண்ட் வரை அபராதம்!

வாகனங்களை நிறுத்திவிட்டு, என்ஜினை அணைக்காமல் இயங்கவிட்டால் 150 பவுண்ட் வரை அபராதம்!

1 minutes read

வேல்ஸில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அவற்றின் என்ஜினை அணைக்காமல் இயங்கவிட்டபடி வைத்திருக்கும் சாரதிகளுக்கு 150 பவுண்ட் வரை அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை, இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைத்து சிறுவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், வேல்ஸ் அரசாங்கத்தால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை நிறுத்திவிட்டு இயந்திரத்தை இயங்க வைக்கும் ‘ஐட்லிங்’ (Idling) எனப்படும் இந்தச் செயலுக்கு முன்னர் 20 பவுண்ட் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

எனினும், தற்போதைய புதிய விதிமுறைகளின் கீழ், நிலைமைகளுக்கு ஏற்ப இந்த அபராதத் தொகை 75 பவுண்ட் முதல் 150 பவுண்ட் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க இந்த அபராத அதிகரிப்பு உதவும் என வேல்ஸ் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கிராமப்புற மீள்தன்மை மற்றும் நிலைபேறுதன்மைக்கான அமைச்சரவை அமைச்சர் லியர் க்ரூஃபித் கருத்துத் தெரிவிக்கையில், முன்பு இருந்த 20 பவுண்ட் நிலையான அபராதத் தொகை போதுமானதாக இருக்கவில்லை எனவும், அது உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கி, தொகையை அதிகரித்துள்ளமையானது இவ்வாறான தவறுகளைத் தடுக்கும் ஒரு பலமான எச்சரிக்கையாக அமையும் என்றும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, பாதுகாப்பான சூழலை உருவாக்க இது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலை விதிகளின் 123ஆவது பிரிவின்படி, பொது வீதிகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதனை கவனிக்காமல் இயந்திரத்தை இயங்கவிட்டபடி செல்வதோ அல்லது அநாவசியமாக இயந்திரத்தை நிறுத்தி வைக்காமல் இயக்குவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாகப் பாடசாலைகள், வைத்தியசாலைகள், குடும்ப மருத்துவ நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகள் இதனால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.