செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!

போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!போயிங் விமானம் என் கனவின் உச்சம் பைலட் காவ்யாவின் ‘த்ரில்லிங்’ அனுபவங்கள்!

2 minutes read

E_1447308030

பெண்கள் என்றால் இந்த வேலையை அவர்களால் செய்ய முடியாது; ‘இது பெண்களுக்கேற்ற துறை இல்லை’ என்று எல்லாம் காலம் காலமாக பேசப்பட்டு வந்தவை எல்லாம் மாறி போய் விட்டது. இன்று பெண்கள் புகுந்து சாதிக்காத துறை ஏது என்பது தான் கேள்வி. ”சைக்கிள் ஓட்டிய நான் இன்று விமானம் ஓட்டுகிறேன். மேகத்தை தொட்டுச் செல்லும், ஊடுருவிச் செல்லும் சந்தோஷத்தை அனுபவிக்கணுமா… வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பறக்கணும்,” என்று சந்தோஷமாய் பேசுகிறார், மதுரையைச் சேர்ந்த இளம் பைலட் காவ்யா, 20.

இன்றைய நம் ‘நாயகி’ காவ்யாவின் கனவுகள் குறித்து அவர் பேசியது:

மதுரை பழங்காநத்தம் ரோடுகளில் சத்தமின்றி சைக்கிள் ஓட்டி சந்தோஷமாக வலம் வந்தவள் நான். இன்று சத்தம் போடும் விமானத்தை லாவகமாக ஓட்டுகிறேன். அப்பா ரவிக்குமார் அரசு பஸ் டிரைவர். சிறுபிள்ளையாய் இருக்கும் போது என் உறவினர்கள் துபாயில் இருந்து எங்கள் வீட்டிற்கு வருவர். அப்போது விமானத்தில் வந்ததையும், விமான பணிப்பெண்களை பற்றியும் நிறைய பேசுவார்கள். அவர்களின் வாயை அடைப்பதற்காக, ‘நீங்கள் வரும் விமானத்தை நான் ஓட்டுவேன்’ என்று சொன்ன ஞாபகம் இருக்கிறது.

சிறுபிள்ளை விளையாட்டுக்கு சொல்கிறது என்று விட்டுவிட்டார்கள். நான் மாறவில்லை. பிளஸ் 2 முடித்த கையோடு பைலட் பயிற்சிக்கு சென்று விட்டேன்.

முதல் பெண் நான் தான்: விமானம் ஓட்டுவதில் ‘டேக் ஆப் மற்றும் லேன்டிங்’ தான் ‘த்ரில்லிங்’ ஆன கஷ்டமான விஷயம். இதை நான் அனுபவித்து செய்கிறேன். பெங்களூருவில் உள்ள ஜக்கூர் ஏரோடிராமில் சிறிய இடத்தில் விமான பயிற்சி பெற வேண்டும். வழக்கம் போல காலையில் 7.30 மணிக்கு 15 நிமிடங்கள் விமானத்தில் பயிற்சி முடித்து விட்டு உட்கார்ந்தேன். திடீரென ஒருநாள் என் பயிற்சியாளர் அமர்ஜித் சிங் டாங்கே, ”காவ்யா, தனியாக விமானத்தை ‘லேன்டிங்’ செய்” என்றார்.

‘டேக்ஆப், லேன்டிங்’ ஆவதற்கு குறைந்தது 3 கிலோமீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். ஜக்கூர் ஏரோடிராமில் மொத்தமே 900 மீட்டர் நீளம் தான். 3700 மீட்டர் உயரத்தில் பறந்து, ‘லேன்டிங்’ ஆகவேண்டும். மிக கடினமான விஷயம் அது. கடந்த ஆறாண்டுகளில் இரண்டு இளைஞர்கள் மட்டுமே சாதித்துள்ளனர். நானும் ‘டேக்ஆப்’ ஆகி 3800 மீட்டர் உயரம் சென்று விட்டேன்.

அவசரமாக 100 மீட்டர் உயரத்தை குறைத்து ‘லேன்டிங்’ ஆனேன். முடித்தபின் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் நான் ஓங்கி கத்தி விட்டேன்.

அதன்பின் பயிற்சியாளர் கேட்டபிறகே, வெளியே வருகிறேன் என்று தகவல் சொன்னேன். அந்த அனுபவத்தை இப்போது நினைத்தாலும் ‘த்ரில்லிங்’கில் உடல் குலுங்கும்.

ஆறாண்டுகளில் இந்த பயிற்சியை (பர்பெக்ட் லேன்டிங்) வெற்றிகரமாக முடித்த ஒரே பெண் என்பதால், என்னை பாராட்டி ‘பேட்ஜ்’ அணிவித்தனர். விமானம் ஓட்டியதை விட பாராட்டியது தான் கொடுமையாக இருந்தது. விமானத்திற்கு பயன்படும் ஆயில், பெயின்டிங்கை தலையில் மொத்தமாக ஊற்றி பாராட்டினார்கள். அதை கழுவுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

உட்காருவது ‘போர்’

ஒருமுறை கூட விமானத்தில் நான் பயணம் செய்தது இல்லை. நேரடியாக விமானம் தான் ஓட்டினேன். இரவில் விமானம் ஓட்டுவது ரொம்பவும் பிடிக்கும்.

இந்தியாவில் ‘கமர்ஷியல் பைலட், மல்டி இன்ஜின்’ பயிற்சி மட்டுமே உள்ளது. நான் ‘டைப் ரேட்டிங்’ பயிற்சி பெற ஆசைப்படுகிறேன். வெளிநாடுகளில் அதற்கான பயிற்சி உள்ளது. மிகப் பிரபலமான போயிங் 737 விமானத்தை இயக்க வேண்டும். அதுதான் என் பறக்கும் கனவின் உச்சம். மனுஷனாக பிறந்தால் ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வேண்டும். அப்போது தான் சொர்க்கத்தின் வாசல் தெரியும் என்றார்.

 

 

நன்றி : தினமலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.