Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

குழந்தைகளை அதிகம் தாக்கும் கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடும்… அறிகுறியும்…

இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும்...

குழந்தை வளர்ப்பில் முக்கியமான அறிவுரைகள்

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

முகத்தின் பொலிவை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

ஒரு வயது வரை குழந்தைக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க….

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்...

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி...

ஆசிரியர்

பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்வியும், பயன்களும்..

தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர்.

தமிழ் மொழிக் கல்வியில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை பற்றி தெளிவாக விளக்குகிறார், சீனு.செந்தாமரை. கடலூரை சேர்ந்தவரான இவர், தமிழ் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ் மொழியில் பல கவிதை படைப்புகளையும், புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் தமிழ் துறையின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் விளக்குகிறார்.

‘‘தமிழில் இளங்கலை (பி.ஏ.) பட்டப்படிப்பு முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை படிக்க முடியும். அத்துடன் ஆசிரியர் கல்வியியல் பயிற்சியும், பட்டப்படிப்பும் படிப்போருக்கு ஆசிரியர், பேராசிரியர் பணிவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் துறை மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் இந்த மொழி சார்ந்த பணியிடங்களைப் பெற முடியும்.

பி.ஏ. பி.எட்., எம்.ஏ. எம்.எட். படிப்பவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் பணிகள் எளிதாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிப்பவர்கள் குறைவாக உள்ளதால், ஏராளமான கல்வி நிலையங்களில் தமிழ் ஆசிரியர் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதே போன்று கலை அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தமிழில் எம்.பில்., பிஎச்.டி. படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்’’ என்பதோடு, தமிழ் மொழியினை கொண்டு அரசு வேலைவாய்ப்பும் பெற முடியும் என்கிறார்.

‘‘தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள், தமிழ்த் துறையில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, அரசின் பல்வேறு துறைகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதே போன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதில் தேர்வு எழுத முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றவர், ஊடகத்துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை விளக்குகிறார்.

‘‘தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் ஆசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அதில் மாற்றம் செய்யப்பட்டு, பல நிலைகளில் சிறப்பான பணிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் மொழி படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எழுத்து, பேச்சு ஆகிய இரு நிலைகளிலும் சிறந்த ஆற்றல் கொண்டிருந்தால் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். குறிப்பாக, பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் என இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று தொலைக்காட்சி, வானொலி பண்பலை போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பு, செய்தி வாசிப்பு ஆகிய பணிகளில் தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

புகழ் பெற்ற பி.பி.சி. சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. இது தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன’’ என்கிறார்.

‘‘தமிழோடு பிறமொழி அறிவு இருப்பின், மொழிபெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வருகின்றனர். அங்கு தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கின்றனர். அங்கும் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை தமிழ்த் துறையில் வளர்த்துக்கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு’’ என்று நம்பிக்கை யுடன் தெரிவிக்கிறார்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே இந்த விஷயங்களை குழந்தைகள் முன்னால் செய்யாதீங்க…

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகளை நல்ல விதமாய்...

கோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர்.

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா?

குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.

பாத்திரங்களை கழுவாமல் இருப்பது ஆபத்தை உண்டாக்கும்

பாத்திரங்களை பிளாஸ்டிக் அல்லது சிலிகான் பிரஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அவை பயன்படுத்தப்படாத போது உலர்ந்திருக்கும். ஆனால் ஸ்பான்ச்...

குழந்தை திருமணம்… காரணங்கள்…

பெற்றோர், அவர்கள் நினைக்கும் வரனுக்குத் திருமணம் செய்ய, குழந்தைத் திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். உலகெங்கிலும் குழந்தைத் திருமணம்...

தொடர்புச் செய்திகள்

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை மகளிர் அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டது பாகிஸ்தான் மகளிர் அணி

இலங்கை - பாகிஸ்தன் மகளிர் அணிகளுக்கு இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச...

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மஞ்சளின் தனித்துவம்

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். இந்திய...

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர பரிகாரம்…

ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள்...

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா?

குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.

மேலும் பதிவுகள்

மாம்பழத்தில் தித்திப்பான கேசரி செய்யலாம் வாங்க…

மாம்பழத்தைப் பயன்படுத்தி ஸ்மூத்தி, மில்க் ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பலவகையான உணவுகள் தயாரிக்க முடியும். அந்த வரிசையில், இன்று சுவையான...

சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது...

ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, அளவற்ற சுகம், மங்காத புகழையடைந்து முடிவில்...

பல்லி சாப விமோசன வரலாறு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ருங்கி...

பெற்றோர்களே இந்த விஷயங்களை குழந்தைகள் முன்னால் செய்யாதீங்க…

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகளை நல்ல விதமாய்...

கடலைப்பருப்பு பாயாசம்

கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

பிந்திய செய்திகள்

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை மகளிர் அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டது பாகிஸ்தான் மகளிர் அணி

இலங்கை - பாகிஸ்தன் மகளிர் அணிகளுக்கு இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச...

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இரு...

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

துயர் பகிர்வு