Saturday, January 16, 2021

இதையும் படிங்க

ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜன் காலமானார்!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் மாரடைப்பால் இன்று காலமானார். ஈழத் திரையுலகத்தை பெரும் சோகத்தில்...

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

முன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...

தாயாய் தாதியாய்..! | சிறுகதை | குரு அரவிந்தன்

(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன) ‘அம்மா, நீ...

என்றும் வாழ்த்தை வழங்கிடுவோம் | மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

இனிமை பயக்கப் பேசிடுவோம்      இயலும் வரைக்கும் உதவிடுவோம்பகைமை மறக்க முயன்றிடுவோம்      பலரும் விரும்பப்...

உயிரோடு புதைந்து போனவர்கள்! | வசீகரன்

இருள் விழுங்கிய மேகமாய் விடிந்ததுஇயர்தரூம் நோர்வேயின் கிழக்குப்பகுதி!நிலச்சரிவு புதுச்சொல் அல்லஅல்லலோடு பிறந்த சொல்! கண்முன் ஓடியது திரைப்படம் போல்விழகளில் திகில்...

சாதனைத் தமிழன் விருது பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு!

நாடக அரங்கப்பணிகளை மக்கள் மயப்படுத்தியும் உயர்கல்விக்குரிய ஆய்வுப் பொருளாக்கியும் உயிர்ப்புடன் செயற்படும் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களுக்கு டான் தொலைக்காட்சியின் 2020ஆம் ஆண்டுக்கான...

ஆசிரியர்

லூயி கிளைக் | 2020 நோபல் பரிசை வென்ற கவிஞர்

Search | லூயிஸ் க்ளூக்

லூயி கிளைக் ஒரு அமெரிக்க பெண் கவிஞர். 77 வயதாகும் இவர் இவ்வருடத்திற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். பழைய படங்களில் வாணிஶ்ரீயின் சாயல் இருக்கிறது. நான் இவரை அதிகம் படித்திருக்கவில்லை. செய்தி கேள்விப்பட்டதும் இவரது மொத்தத் தொகுப்பை (Louis Gluck: Poem 1962 – 2012 ) தரவிறக்கி சுவாரஸ்யமாய் பட்ட தலைப்பிலான கவிதைகளை முதலில் படித்தேன். கணிசமான கவிதைகள் சிறியவை.

பின்நவீன தாக்கம் ஆச்சரியமாக இல்லவே இல்லை. கச்சிதமான நவீனத்துவ கவிதைகள். கராறான வடிவ ஒழுங்கை கொண்டவை. அனேகமாய் எல்லா கவிதைகளிலும் மரணம் வந்து போகிறது. குழந்தைகளைப் பற்றி அதிர்ச்சிகரமான சித்திரங்களை அடிக்கடி உருவாக்குகிறார் – குறிப்பாய் இறந்து போகும் குழந்தைகள். இதற்காக இவர் விமர்சனத்துக்கு உள்ளாகினாலும், குழந்தைகளை அதிர்ச்சிகரமாய் சித்தரிப்பதை விட மரணத்தை தழுவும் குழந்தைகளிடத்தும், பிறக்கும் மதலைகளித்தும் ‘தன்னை வைத்துப் பார்ப்பதையே’ இவர் விரும்புகிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

மரணமுறும் அல்லது மரணத்தின் விளிம்பில் இருந்து வாழ்வுக்கு நகர்ந்து வரும் குழந்தைகளிடம் ஒரு சன்னமான பலவீனமான இருப்பு உள்ளது, தொட்டால் உடைந்து போகும் குமிழ்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். குழந்தைமை என்பதே காலத்தின் இன்மையை, காலமற்ற நிலையை நோக்கிய இறைஞ்சலாக அவர் பார்க்கிறார் என நினைக்கிறேன். இது வழக்கமான ரொமாண்டிஸ பார்வைக்கு நேரெதினாது (ரொமாண்டிஸ கவிஞர்கள் குழந்தைமையை களங்கமின்மையின், தூய்மையின், பாவங்கள் தீண்டாத நிலையின் உருவகமாகக் கண்டார்கள்).

கிளைக்கை முதலில் படிக்கும் போது இவரெல்லாம் ஒரு பெரிய கவிஞரா எனும் எண்ணம் ஏற்படும் – ஏனென்றால் ஒரு வசீகரமான மொழியோ ஸ்டைலோ, வித்தியாசமான ஆளுமையோ இவரிடம் இல்லை. மிக மிக சன்னமாய், துண்டுத்துண்டாய் எழுதுகிறார். உணர்ச்சிகரமான நாடகீயமான எழுத்துநடை இல்லை. ஆனால் கவனித்து படித்தால், பல கவிதைகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்த்தால் ஒரு உக்கிரமான தீவிரமான கவிஞர் இவர் எனத் தோன்றுகிறது – குறிப்பாக இருப்பு, மரணம் குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவை.

இவர் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை – நோபல் கிடைத்தவர்கள் எல்லாரும் நமக்குப் பிடித்தவர்கள் அல்லரே. நோபல் கிடைக்காதவர்களை நாம் நிராகரிக்கிறோமா என்ன? எத்தனையோ பரிசுகளைப் போல இதுவும் என்றே நான் பார்க்கிறேன்; எல்லா கவிஞர்களுக்கும் இப்படி உலகமே (அல்லது ஒரு மாநிலமோ ஊரோ தெருவோ) திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும் – அப்போது அவர்களைப் படிக்கவும் பேசவும் செய்ய வேண்டும். இது லூயி கிளைக்குக்கான வேளை. அவரையும் பொருட்படுத்தி வாசிக்கையில் ஒரு புதிய உலகம் நமக்கு வசமாகிறது.

லூயி கிளைக்கின் கவிதைகள் அறுபதுகளின் பின்னமைப்பியல் பெண்ணியக் கவிதைகளில் இருந்து எவ்வளவு விலகி இருக்கின்றன என்பதே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சில்வியா பிளாத்தின் கவிதைகளுக்கு சற்று நெருக்கமாய் உள்ளன (பிளாத் அளவுக்கு உரக்கப் பேசும் இயல்பு இவருக்கு இல்லையெனிலும்). அதனாலே தமிழ் பெண்ணிய கவிஞர்களிடம் இருந்து இவரது கவிதைகள் நெடுந்தொலைவு விலகித் தெரிகின்றன.

தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளை ஆச்சரியமாய் இவை ஒத்துள்ளன – கலாப்ரியாவின் கவிதை ஒன்றை எடுத்து மரணத்தை ஒரு டோஸ் கலந்தால் கிளைக்கின் கவிதை வந்து விடும். அத்தோடு கொஞ்சம் நாடகீயமான தருணங்களை கலந்தால் போகன் சங்கரின் கவிதை வந்துவிடும் (அவருக்கு இக்கவிதைகள் பிடிக்கும் என கணிக்கிறேன்.) சுருக்கமாய், கிளைக் ஒரு ‘அமெரிக்க கலாப்ரியா’

உங்கள் வாசிப்புக்காக எனக்குப் பிடித்த கிளைக்கின் கவிதைகளில் சிலவற்றை மொழியாக்கியிருக்கிறேன். இங்கு இரண்டைத் தருகிறேன் – இக்கவிதைகளில் என்னைக் கவர்ந்தது அவர் எப்படி மரணத்தை ஒரு பின்னோக்கிய பயணமாக உருவகிக்கிறார் என்பது.

“COTTONMOUTH COUNTRY

Fish bones walked the waves off Hatteras.

And there were other signs

That Death wooed us, by water, wooed us

By land: among the pines

An uncurled cottonmouth that rolled on moss

Reared in the polluted air.

Birth, not death, is the hard loss.

I know. I also left a skin there.”

விரியன் பாம்புகளின் தேசம்

ஹத்தெரெஸில் இருந்து அலைகளில் நடந்தேறி வந்தன மீன் எலும்புகள்.

மரணம் காதல்மொழி பேசி நீரில் கவர்ந்திழுக்கிறது,

மண்ணிலும் வசீகரிக்கிறது என்பதற்கு

அறிகுறிகள் தோன்றின: பைன் மரங்களுக்கு இடையே

பாசியில் உருளுகிற, அசுத்தமான காற்றை உறிஞ்சி வளர்ந்த,

நீண்ட ஒரு விரியன் பாம்பு.

துயரமான இழப்பென்பது பிறப்பே, இறப்பு அல்ல.

எனக்குத் தெரியும். நானும் அங்கு ஒரு சட்டையை விட்டு வந்தேன்.

“LATE SNOW

Seven years I watched the next-door

Lady stroll her empty mate. One May he turned his head to see

A chrysalis give forth its kleenex creature:

He’d forgotten what they were. But pleasant days she

Walked him up and down. And crooned to him.

He gurgled from his wheelchair, finally

Dying last Fall. I think the birds came

Back too soon this year. The slugs

Have been extinguished by a snow. Still, all the same,

She wasn’t young herself. It must have hurt her legs

To push his weight that way. A late snow hugs

The robins’ tree. I saw it come. The mama withers on her eggs.”

பின்பனி

பக்கத்து வீட்டுப் பெண் தன் காலியான துணையுடன் நடைபழகுவதை

ஏழு வருடங்களாய் பார்த்திருந்தேன். ஒரு மே மாதத்தில் அவன் தனது தலையை உயர்த்தி நோக்கினான்

ஒரு பொற்புழு தனது டிஷ்யூபேப்பர் சிசுவை பிரசவிப்பதைக் காண.

அவை என்னவென அவன் மறந்திருந்தான். ஆனால் மகிழ்ச்சியான தினங்களில்

அவள் அவனை மேலும் கீழுமாய் தள்ளிச் சென்றாள். இதமான குரலில் பாடினாள்.

அவன் தன் சக்கரநாற்காலியில் இருந்து கிளுக்கிளுக் என சப்தமிட்டான், இறுதியாக

கடந்த இலையுதிர் பருவத்தில் இறந்துபோனான் அவன். அந்த ஆண்டில் பறவைகள்

சீக்கிரமே திரும்ப வந்துவிட்டன என நினைக்கிறேன். இலையட்டைகள் ஒரு பனியில் முழுக்க அழிந்து போயிருந்தன. இருந்தாலும், இவ்வளவு ஆகியும்,

அவள் இளமையை இழந்திருந்தாள். அப்படி அவனது எடையை

உந்தித் தள்ளி அவளுக்கு கால்கள் வலித்திருக்கும். ராபின் பறவைகளின்

மரத்தை ஒரு பின்பனி தழுவுகிறது. நான் அது வருவதைக் கண்டேன். தாய்ப்பறவை அடைகாத்தபடி வாடுகிறது.

(அடுத்து வரும் பதிவுகளில் கிளைக்கின் வேறு சில கவிதைகளோடு வருகிறேன்)

அபிலாஷ் சந்திரன்

இதையும் படிங்க

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்

இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...

நாம் செய்ய வேண்டியவை | வெற்றிச்செல்வி

இடி-உடை-நொருக்கு-பழிதீர் இளையவர்களே!நாம் செய்ய வேண்டியவை எல்லாம்துரும்பாயாகினும்முளைப்பதேமுளைத்துக்கிளைப்பதே நீயும் நானும்அவர்களது கருத்தில் 'பொருட்டாயிருக்கிறோம்' அதுவே வெற்றி தான்.

போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர்  நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின்...

தொடர்புச் செய்திகள்

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிம்புசிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில்...

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!

அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பாக மக்கள் வங்கி பின்வருவனவற்றை பதிவு செய்ய விரும்புகிறது: ஆரம்பம்...

முடக்கப்பட்டது திருகோணமலையின் பூம்புகார் கிழக்கு பிரதேசதம்

திருகோணமலை, உப்புவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிழக்கு பிரதேசம் இன்று (16) முதல் முடக்கப்பட்டுள்ளது. பூம்புகார் கிழக்கு...

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார்

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார்.

மேலும் பதிவுகள்

இன்டர்நெட்டில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்

வரும் 13ஆம்தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பட காணொளி என கூறப்படும் படத்தின் காட்சிகள், இன்டர்நெட்டில் கசிந்திருப்பது அந்த திரைப்படக்குழுவினரை...

தாமாக முன்வருபவர்களுக்கே கொரோனா தடுப்பூசி

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை...

போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர்  நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின்...

வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

உலகமெங்கும் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற உழவப் பெருமக்களுக்கு உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் லண்டன் தனது வாழ்த்துளை தெரிவித்துக்கொள்ளுகிறது.

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

MGRஐ சொந்தம் கொண்டாட உரிமை உள்ளது

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். ஈரோடு...

பிந்திய செய்திகள்

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிம்புசிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில்...

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.தனுஷ்நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக்...

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் கடந்த...

ஆஸி டெஸ்டில் மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால்,...

ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்தார் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’...

துயர் பகிர்வு