Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்

கவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்

1 minutes read

 

காந்தள் மெல்விரல் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020

கார்த்திகையில் பூ
விரியும் காலம் இது
கனவு பல கண்டவனின்
காலம் இது

உயிர் தந்த உத்தமரின்
காலம் இது
உனக்காக வாழ்ந்தவனின்
காலம் இது

காலம் எல்லாம் காத்திருந்தோர்
காலம் இது
கல்லறைகள் கவி எழுதும்
காலம் இது

கண் எதிரே நின்றவனின்
காலம் இது
கல்லறைகள் பேச வரும்
காலம் இது

எம் தமிழில் பூ விரியும்
காலம் இது
எத்தனையோ தீபங்களின்
வெளிச்சமிது

வெந்தணலில் நின்றவனின்
காலம் இது
வீரன் இவன் எழுதிச் சென்ற
வாழ்வு இது.

பா.உதயன் ✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More