Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | புடவை | கமல் ஆபரன்

கவிதை | புடவை | கமல் ஆபரன்

1 minutes read
Image may contain: 1 person, standing and dancing

~
பாதி மடித்த புடவையை
உதறி விரிக்கையில்
விரல் நுனிகளிலிருந்து
விடுபட்டு விரியும் பிரபஞ்சம். ~
அக்கணம்
அவளே ஆதித்தாய்!
~

புடவை முனைகளிரண்டுடனும்
அபயமுத்திரை பிடிக்க
அண்ணனும், நானும்
புடவை
ஓரங்களை நீவிய படி
அவளிலிருந்து நீங்கி ஓடுவோம்.

அப்போதும்,
அதன் பிறகும்

அவளிலிருந்தான
ஆகக் கூடிய எல்லை ~
புடவை நீளத்தின் பாதி தான்!
~

அரக்கு நிறப்புடவை
கட்டும்போதெல்லாம்
கொடிமேல் காயும்
புடவையின் படபடப்புக்கு
அம்மாவின் அவசரக்குரலின் சந்தம்!
~

நள்ளிரவில்
ஊர்நீங்குபவன் பெட்டியில் ~
மடித்து வைத்துக்கொள்கிறான்
அம்மாவை!
ஒவ்வோர் மடிப்புக்கும்
அம்மாவின் ஒருநூறு முகங்கள்!
~

புடவை மடிப்பதும்
பிராட்டி
தனக்குத் தானாற்றும் சடங்கு!

கமல் ஆபரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More