Friday, September 17, 2021

இதையும் படிங்க

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

ஆசிரியர்

படகு மனிதர்களின் ஆத்மாவை புதிய நாவலில் சித்திரித்த படைப்பாளி தாமரைச்செல்விக்கு சாகித்திய விருது! | முருகபூபதி

தாமரைச்செல்வியின்  “ உயிர்வாசம்  “ நாவலுக்கு  இலங்கையில் தேசிய சாகித்திய விருது ! 

கடந்த அரை நூற்றாண்டு காலமாக இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் தாமரைச்செல்வியின் புதிய நாவலான உயிர்வாசம் நூலுக்கு ( 550 பக்கங்கள் )  இம்முறை இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆறு நாவல்களும் நான்கு கதைத் தொகுதிகளும் எழுதியிருக்கும் தாமரைச்செல்வி, அவற்றுள் சிலவற்றுக்கும் முன்னர் விருதுகள் பெற்றவர். 

மீண்டும் சாகித்திய விருது பெற்றுள்ள எமது இலக்கியக் குடும்பத்தின் சகோதரியை வாழ்த்தியவாறே இந்தப்பதிவினை எழுதுகின்றேன்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவல்  சுமைகள்   வீரகேசரி  பிரசுரமாக வெளியாகும்போது  அவருக்கு 24  வயதுதான்.    

1970 களில்   சில  பெண்   படைப்பாளிகள்  இலங்கை  வானொலியில்  இசையும்  கதையும் எழுதிக்கொண்டிருந்தார்கள்.    மாலை வேளைகளில்  ஒலிபரப்பாகும் இந்த  நிகழ்ச்சியில்,  சில  கதைகளை  தாமரைச்செல்வியும்  எழுதியிருந்தார்.    கதைக்குப்பொருத்தமான  சில  சினிமா   பாடல்களும் ஒலிக்கும்.    இந்த  நிகழ்ச்சிக்கு  அக்கால  கட்டத்தில்  சிறந்த வரவேற்பிருந்தது.      ஒரு வருடகாலத்திலேயே   அதிலிருந்து  இவர் மீண்டுவிட்டார். 

இவருடைய  முதல்  சிறுகதை  ஒரு  கோபுரம்  சரிகிறது  வீரகேசரியில்    வெளியானபொழுது,  1974  ஆம்  ஆண்டு பிறந்துவிட்டது.    அதனைத்தொடர்ந்து  இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்   வெளியான  இதழ்களில்  தாமரைச்செல்வியின் சிறுகதைகள்   வெளிவரத்தொடங்கின.

ஆனந்தவிகடன்,   குங்குமம்,   மங்கை   முதலான  இதழ்களிலும் அவருடைய  படைப்புகளை   காண  முடிந்தது.

இவ்வாறு  கடந்த  ஐந்து   தசாப்த  காலமாக  எழுதிக்கொண்டிருக்கும் தாமரைச்செல்வியை   அமைதியான  சாதனையாளர்  என்றுதான் குறிப்பிடவிரும்புகின்றேன்.    கவிதை,  சிறுகதை,  நாவல்,  குறுநாவல் எழுதியிருக்கும்  இவர் , ஓவியத்துறையிலும்  ஈடுபாடுள்ளவர்.  சில இதழ்களில்   இவர்  எழுதிய  கதைகளுக்கு  இவரே  ஓவியமும் வரைந்திருப்பார்.

இருநூறுக்கும்  மேற்பட்ட  சிறுகதைகள் எழுதியிருக்கும் இவரது  இருபதுக்கும் மேற்பட்ட  சிறுகதைகள்   பல   இலக்கியப்போட்டிகளில்  பரிசுபெற்றுள்ளன.

அத்துடன்  தமது  நூல்களுக்கு  அரச  மற்றும்  அமைப்புகளின் விருதுகளும்    தங்கப்பதக்கமும்  பெற்றிருப்பவர்.   அந்த  விபரங்களே தனியான  ஒரு  பட்டியல். 

இவருடைய   சிறுகதைகள்,   நாவல்களில்  வன்னிமண்ணின்  மணம் கமழும்.    பிரதேச  இலக்கியத்தில்  வன்னி   மண்ணின்  மகிமையை எழுதிய  படைப்பாளிகளின்  வரிசையில்  இவருக்கும்  தனியிடம் இருக்கிறது.

சுயமாக   தமது  துறைகளில்    முன்னேறி   சாதனை   புரிந்து  தமது  ஆளுமைப்பண்பை   காண்பித்த  ஆண்கள்   குறித்து  ஆங்கிலத்தில்  Self-made man  என்பார்கள்.  தாமரைச்செல்வியின்  வாழ்வையும் பணிகளையும்  பார்த்தால்  அவரை   ஒரு  Self-made woman  என்றுதான்  சொல்லவேண்டும்.

பாடசாலையில்   படிக்கும்  காலத்திலேயே   மாணவர்  இலக்கிய மன்றத்திற்கு   நாடகங்கள்  எழுதிக்கொடுத்திருக்கும்  இவர்,  பின்னர் இலங்கை   வானொலிக்கு  இசையும்  கதையும்  எழுதினார். அதிலிருந்து   மீண்டு வந்து  இலங்கைப்பத்திரிகைகள் – இலக்கிய இதழ்கள்   ஈழநாடு,  வீரகேசரி,  சுடர்  மற்றும்  தமிழக  இதழ்களில் எழுதினார்.   ஆயினும்,  ஒரு  விவசாயக்குடும்பத்தில்  பிறந்திருக்கும் இவருக்கு  பரந்தன்  குமர புரத்திற்கு  அப்பால்  வெளியுலகம் தெரியாமலேயே  வானொலி,  பத்திரிகைகள்,  இதழ்கள்  என்று அறிமுகமாகிவிட்டார்.

தமது  ஆரம்பக்கல்வியை  பரந்தன்  இந்து  மகா  வித்தியாலயத்திலும் அதன்   பின்னர்  யாழ். இந்து  மகளிர்  கல்லூரியிலும் தொடர்ந்திருக்கும்   இவர்,   இலக்கியப்பிரதிகளை  எழுதத்தொடங்கிய காலகட்டத்தில்   வீரகேசரி  பிரசுரங்கள்  வெளியாகத்தொடங்கிவிட்டன.

தமது  முதல்  நாவலுக்கு  தீக்குளிப்பு  என்ற  தலைப்பிட்டு  அதன் மூலப்பிரதியை  வீரகேசரி  அலுவலகத்திற்கு  தபாலில் அனுப்பிவைத்துள்ளார்.    வீரகேசரியின்  Administrative  officer  ஆகவும் வீரகேசரி  பிரசுரங்களின்  பதிப்பாளராகவும்  பணியாற்றிய                    திரு. (அமரர்) பாலச்சந்திரன்   இலக்கிய  ஆர்வம்  மிக்கவர்.   பிரசுரத்துக்கு  வரும்   நாவல்களை  படித்து  தெரிவுசெய்வார்.   அங்கு  விளம்பரப்பிரிவு – விநியோகப்பிரிவு  முகாமையாளராக   பணியாற்றிய  இவருடைய நீண்ட கால  நண்பர்  திரு. து. சிவப்பிரகாசம்   அவர்களும்  நாவல்  தெரிவில்  உடனிருந்தவர்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவலான  தீக்குளிப்பை  படித்த பாலச்சந்திரன்   வளர்ந்து  வரும்  ஒரு  பெண்  படைப்பாளியின் ஆற்றலை  இனம்  கண்டு,  அதில்   மேலும் செம்மைப்படுத்துவதற்கான   தேவை   இருப்பதை  தெரிந்துகொண்டு பரந்தனில்  வசித்த  தாமரைச்செல்விக்கு  கடிதம்  எழுதி வசதிப்படும்பொழுது   கொழும்பில்  வீரகேசரி  அலுவலகம்  வந்து சந்திக்குமாறு  கோரியிருந்தார்.

அந்தக்கடிதம்   தாமரைச்செல்விக்கு  ஊக்கமாத்திரைதான்.  ஒரு  பெரிய நிறுவனத்திடமிருந்து   வந்துள்ள  அழைப்பை  ஏற்றுக்கொண்டு  தமது தந்தையாருடன்   வீரகேசரி  அலுவலகம்  வந்திருக்கிறார்.  தீக்குளிப்பு  நாவல்  தொடர்பாக  தம்மைச் சந்திக்கவந்த தாமரைச்செல்வியிடம்   ஒரு  நாவல்  எவ்வாறு  அமையவேண்டும், வாசகர்களை   ஆர்வமுடன்  படிக்கத்தூண்டும்  அம்சங்கள்  யாவை முதலான  சில  ஆலோசனைகளை   தமது  நீண்ட  கால  வாசிப்பு அனுபவத்திலிருந்து  பாலச்சந்திரன்  தெரிவித்திருக்கிறார்.

சுயமாக  சிறுகதைகள்,  கவிதைகள்  எழுதிக்கொண்டிருந்த   இவருக்கு அந்த   சந்திப்பு  வித்தியாசமான  அனுபவம்தான்.   தன்னை  எவ்வாறு இலக்கியத்துறையில்   வளர்த்துக்கொள்ளவேண்டும்  என்பதை  தாம்  அன்றைய   அந்தச்சந்திப்பில்  பெற்றுக்கொண்டதாக   சமீபத்தில்  அவர் தெரிவித்தார்.

வன்னி   பெருநிலப்பரப்பில்    மழைமேகம் மறைந்து   – நெருப்பும்  கந்தகமும்தான்  சீறிப்பாய்ந்தபோது  தாமரைச்செல்வியின்    போர்க்காலக்கதைகள்    மக்களின்  வலியை பேசியவை.    இடப்பெயர்வை    சித்திரித்தவை.

கிளிநொச்சி     போர்க்காலத்தில்  கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்திருந்ததை    அறிவோம்.     உயிரைக்கையில்  பிடித்துக்கொண்டு இடம்பெயர்ந்து…இடம்பெயர்ந்து    ஓடிய  மக்கள்   திரளில்  தாமரைச்செல்வியின்   குடும்பமும்   இணைந்திருந்தது.    அந்தப் போர் அவலச்சூழலிலும்   அவர்   இலக்கிய   பிரதிகள்  படித்தார் , எழுதினார். தற்காலிக   குடிசைகள்  அமைத்து  அங்கிருந்து   ஜெனரேட்டரின் உதவியுடன்   பாரதி   படத்தை  பார்த்ததையும்  அகிரா  குரேசேவாவின் படங்களை   ரசித்ததையும் –   ஸ்கந்தபுரம்   என்ற  பிரதேசத்துக்கு அப்பால்   காட்டுப்பகுதியில்   கொட்டில்கள்  அமைத்து  வன்னிப்பிரதேச    இலக்கியவாதிகளுடன்  கலந்துரையாடியதையும் நினைவுகூர்ந்தார்.

நெருக்கடி மிக்க   போர்க்காலச்சூழலிலும்  காலச்சுவடு,   முன்றாவது மனிதன்,  சரிநிகர்  முதலான  கையில்  கிடைக்கும்  இதழ்கள்,  நூல்கள்    பற்றியெல்லாம்    இலக்கிய   நண்பர்கள்    மத்தியில் கலந்துரையாடியிருக்கிறார்.    இயற்கையுடன்   இணைந்து  காட்டுப்பிரதேசத்தில்    இலக்கிய  சந்திப்புகள்  நடத்தியதையும் நினைவுபடுத்தினார். 

தாமரைச்செல்வியின்    கணவரும்  எழுத்தாளர்தான்.   சிறுகதைகள் எழுதியிருப்பவர்.    எனினும்  அவர்  குடும்பத்தலைவனாக  வீட்டையும்   குடும்பத்தையும்    கவனித்தார்.   மனைவியோ   குடும்பத்தையும் கவனித்து    இலக்கியத்திலும்  தனது  ஆளுமையை   பதிவுசெய்தார்.

இந்த  இலக்கிய  தம்பதியரின்  இரண்டு   பெண்செல்வங்களும் அவுஸ்திரேலியாவில்  மருத்துவர்களாக  பணியாற்றுகின்றனர். 

தாமரைச்செல்வியின்  சில  படைப்புகள்  குறும்படங்களாக வெளியாகியிருக்கின்றன.   வன்னிக்கு  வந்துள்ள  இயக்குநர்  ‘முள்ளும் மலரும் ‘  மகேந்திரன்   இவருடைய   இடைவெளி   என்ற  சிறு கதையை   1996 ‘  என்ற  பெயரில்   குறும்படமாக்கியுள்ளார்.   அத்துடன் மகேந்திரனின்  மகன்  ஜோன்  மகேந்திரன்  இவருடைய  மற்றும்  ஒரு   சிறுகதையான  பாதணியை  குறும்படமாக   எடுத்துள்ளார்.

 தமிழகத்தைச்சேர்ந்த   இமையவரம்பன்,    தாமரைச்செல்வியின்  பசி என்ற  சிறுகதையை  குறும்படமாக்கியிருக்கிறார்.  ( இக்கதை தமிழ்நாட்டில் பாடப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது )   இப்படம் லண்டனில்   நடந்த   விம்பம்   குறும்பட விழாவில்  காண்பிக்கப்பட்டு பார்வையாளர்  விருது   கிடைத்திருக்கிறது.    இவை  தவிர  மேலும் இவருடைய   சில  சிறுகதைகள்    குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்தப்பத்தியின்  தொடக்கத்தில்   தாமரைச்செல்வியை  ஆளுமைமிக்க சாதனையாளர்  என்று  குறிப்பிட்டதற்கான   காரணங்களை   இங்கே பதிவுசெய்கின்றேன்.

ஒரு  மழைக்கால  இரவு – சிறுகதைகள்   ( வடக்கு – கிழக்கு மாகாண சபையின் 1998 ஆம்  ஆண்டிற்குரிய  விருது.

விண்ணில்  அல்ல  விடிவெள்ளி ( யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

தாகம் – நாவல்  ( கொழும்பு  சுதந்திர   இலக்கிய  அமைப்பின்  சிறந்த நாவல்  விருது  மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

வேள்வித்தீ – குறுநாவல்   ( முரசொலி  பத்திரிகையின்  முதல்  பரிசு)

வீதியெல்லாம்  தோரணங்கள் – நாவல் ( வடமாகாண  சபையின்  விருது   மற்றும்  இரசிகமணி   கனகசெந்தி நாதன்   நினைவுப்போட்டியில்   இரண்டாம்  பரிசு)

பச்சை வயல்  கனவு – நாவல்  ( இலங்கை  அரச  சாகித்திய விருது மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின் விருது. )

இவை   தவிர வட – கிழக்கு ஆளுனர்  விருதும்  வேறும்   சில  பிரதேச அமைப்புகளின்   இலக்கியத்திற்கான  விருதுகளும்    பெற்றவர். சில சிறுகதைகள்  ஆங்கிலத்திலும்   மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மல்லிகை  2002  மார்ச்  மாத   இதழில்  தாமரைச்செல்வி   அட்டைப்பட அதிதியாக  கௌரவிக்கப்பட்டுள்ளார்.  

போரினால்    பாதிக்கப்பட்டவர்கள்   பற்றி  எழுதியதுடன்  நின்றுவிடாமல்,  போர்  தந்த  பரிசுகளான  பெற்றவர்களை  இழந்த குழந்தைகளின்   கல்வி  வளர்ச்சிக்கும்  இவர்  உதவிவருகிறார். இந்தப்பணியில்  இவருடைய  கணவரும்  மகள்மாரும் பக்கத்துணையாக  விளங்குகிறார்கள். 

ரதி தேவி   என்ற  இயற்பெயர்    கொண்ட    இவர்  வன்னி  நிலத்தின் குளங்களில்   மலரும்  தாமரைகளை  தினம்தினம்  ரசித்தமையின் பலன்தான்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு   ஒரு   தாமரைச்செல்வி கிடைத்தார்   என்றும்   நான்  நினைத்திருக்கின்றேன்.

 தாமரைச்செல்வியின்   எளிமையான  இயல்புகள்  போற்றத்தக்கவை. அதிர்ந்து  பேசத்தெரியாதவர்.    விவசாய  மக்களினதும் போர்க்காலத்தில்    இடம்பெயர்ந்தவர்களினதும்    வாழ்வை  அருகிருந்து   பார்த்து ,  அவரவர்  இயல்புகளுடனேயே   உயிர்ப்புடன் படைப்பிலக்கியமாக்கியவர்    இந்த  வன்னியாச்சி.

அவுஸ்திரேலியாவுக்கு உயிரைப்பணயம் வைத்து ஆழ்கடலூடாக பிரவேசித்த படகு மனிதர்களின் வாழ்வுக்கோலங்களையும் தாமரைச்செல்வி,   இறுதியாக தாம் எழுதிய  உயிர்வாசம்  நாவலில் சித்திரித்தார். 

பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளையும் பார்த்து  அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் ,  அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு  படகுகளில்  வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார்.

அவருடைய  உயிர்வாசம் என்ற இந்தப் புதிய நாவல்,   ஐநூறு பக்கங்களைக்கொண்டது.  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான்  இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும்  நாம் நுகரும் வாசம்!

காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை!

இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில்  இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில்  எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள்  கதைகளை கேட்டு  பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள்  பற்றிய செய்திகளையும்  கடந்து வந்திருக்கின்றோம்.

பசுமை நிறைந்த வயல்வெளிகளின் தென்றல் காற்றை சுவாசித்த மக்களின்   ஆத்மாவை   ஏற்கனவே சித்திரித்திருக்கும் தாமரைச்செல்வி, முதல் தடவையாக  ஆழ்கடலின் உப்புக்காற்றை சுவாசித்து  வந்த  அகதி மக்களின் கதையை உயிர்த்துடிப்போடு வரவாக்கியிருக்கிறார்.

 “ உயிர் காக்க படகேறி கடலோடு கரைந்து போனவர்க்கு  “ இந்த நாவலை சமர்ப்பித்துள்ளார்.

 “ இந்த நாவலை   வாசித்து முடிக்கும்போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக  வெளியே வருவீர்கள் “   என்று யசோதா  பத்மநாதனும்,  “ இந்த நாவல் தமிழ்ச்சூழலுக்கு இன்னொரு  வாசல். இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் தாமரைச்செல்வி உண்டக்குகிறார் “ என்று கருணாகரனும், இந்நாவலில் குறிப்புகள் எழுதியுள்ளனர்.

தனது உயிர்வாசம் நாவலுக்காக  தேசிய சாகித்திய விருதுபெற்றுள்ள தாமரைச்செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

முருகபூபதி 

letchumananm@gmail.com

இதையும் படிங்க

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

தொடர்புச் செய்திகள்

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான...

விராட் கோலி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

மேலும் பதிவுகள்

இலண்டன் பல்கலையில் தமிழ்த்துறையை மீளுருவாக்க ஸ்டாலினிடம் கோரிக்கை!

இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர்திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைபடிப்புகள் நடத்திட...

சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி

அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய...

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

சொந்த மண்ணில் தலை குனிந்தது இலங்கை; தென்னாபிரிக்கா வெற்றி

குயின்டன் டிகொக் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரின் வலுவான ஆரம்ப துடுப்பாட்டத்தினால் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்காக அணி வெற்றி பெற்றுள்ளது.

நாடு வங்குரோத்து அடைவதனை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது– சஜித்

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராம தெபரவெவ பகுதியில் இன்று...

‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’ | நடிகை வாணிபோஜன் பேட்டி

வாணிபோஜன் தினமும் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு...

பிந்திய செய்திகள்

லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் செயற்பாடு, இலங்கை அரசாங்தக்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

துயர் பகிர்வு