செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தோல்விகள்!தோல்விகள்!

தோல்விகள்!தோல்விகள்!

0 minutes read

தோல்வி என்று சொல்வதை விட

பன்மையில் சொல்வதுதான்

பலரது வாழ்க்கையில் நடக்கிறது.

ஆனால்!

ஒவ்வொரு தோல்வியும் கூட

அடுத்தது வெற்றிதான் என

அடுத்த அடியை எடுத்து வைக்க

தோன்றுகிறது,சில நேரங்களில்

மனதுக்குள் இருள் வந்தாலும்.

தோல்விகளை கமா,என்று

போட்டுக்கொண்டால்,முற்றுப்புள்ளி

வரும்வரை எழுதிக்கொண்டே

இருக்கலாம், எழுதுபவன் மட்டும்

சோர்ந்து போகக்கூடாது!.

வெற்றி பெற்றவனை உலகம்

பெருமிதமாக பார்க்கும்,ஆனால்

வெற்றி பெற்றவன் மட்டும்

தோல்வியுற்றவனை,பொறாமையுடன்

பார்ப்பான், காரணம் இவன்

முற்றுப்புள்ளி ஆகிவிட்டான்,

அவன் கமா’வில் மீண்டும்

ஆரம்பித்துவிட்டான்.

வெற்றி என்னும் அணுகுண்டாய்

வெடித்து மறைவதை விட தோல்வி

என்னும் பொட்டு பட்டாசாய்

பட்,பட் என வெடித்துக்கொண்டே

இருக்கலாம் அல்லவா!.

 

 

நன்றி : வலைத்தமிழ். காம் | தாமோதரன். S

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.