செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மின்னலாய் ஒரு! | கவிதை | நிர்வாணி

மின்னலாய் ஒரு! | கவிதை | நிர்வாணி

0 minutes read

அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து
இன்னும் இன்னும் நெருங்கி
எனக்குள் அவளையும்
அவளுக்குள் என்னையும்
தேட முற்பட்டு
இருவருமே தோல்வியைத் தழுவி
விவாகரத்துக்காய் காத்திருக்கிறோம்
இடையில்
ஏதோ மின்னலாய் ஒரு வாழ்க்கை
ஊரறிய மேள தாளம்
வீடு வீடாய் போசனம்
புதுத்தம்பதியை அயல் பார்த்து
மெலிதான புன்னகை சிந்தி
சுமைகளே இல்லாமல் வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தோம்
எல்லாம் மறந்து போகட்டும்
மீண்டும் அவளைக் காதலிக்கவேண்டும்
“கல்யாணம்“ என்ற வார்த்தையையும்
சடங்கையும் மறந்துகொண்டு!

 

நன்றி : நிர்வாணி | வார்ப்பு இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.