செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் யாசகன் | முல்லையின் ஹர்வி

யாசகன் | முல்லையின் ஹர்வி

0 minutes read

சந்தியின் தெருமுனையில்
குப்பைத் தொட்டியொன்று,
எஞ்சிய உணவுகளை
மோப்பம் பிடித்தபடி – தெருநாய்கள்

குட்டைக் காற்சட்டை,
கருமை தீண்டிய நீலச் சேட்டு,
ஆங்கதில் கிழிசல்கள் பல,
முகத்தை மறைப்பதாய்
முடிபடர்ந்து இருந்தது.
உக்கல் ஆடைக்குள் மறைந்திருக்கும்
இவன் – கனத்த சோகங்கள்

வயதொன்றும் பத்தைக்
கூடக் கடந்திருக்காது
நெளிந்த தட்டொன்றுடன்
ஓரிரு ரூபாய்காய் காத்திருக்கிறான்.
வழிப்போக்கரின் வருகைக்கு

ஈக்களும் கொசுக்களும்
அவன் – உற்ற நண்பர்கள்..
வானும் தரையும் அவன்- வசிக்கும் வீடு
காற்று அவன் – போர்க்கும் போர்வை

யாரும் தொட்டுப் போகாத,
குப்பைத் தொட்டியில் கைவிட்டு உண்பான்.
ஈக்கள் மீதம் விட்ட எச்சில் உணவுகளை…

வழியெங்கும் வீசப்பட்டெறிந்த
ஒற்றைச் செருப்பை, காலில் சுமந்தபடி
கையேந்தி நிற்கிறான்..
கணப்பொழுதில் மாறும்
நாளிகையை கணக்கெடுக்க மறந்தவனாக,

ஊமை அவன் என்பதனால் –
தட்டில் கிடந்த சில்லறைகள்
தாளம் போட்டபடி வருபவர் போபவரிடம்
பிச்சை கேட்கும்

வேறு இடம் போக வந்த என்னிடம்
கையெடுத்துக் கும்பிட்டான்
ஏதேனும் தரச் சொல்லி..
நான் சேர்த்த சில்லறையில்
பத்து ரூபாயை தட்டுக்குள்
போட்டு விட்டு நகர்ந்தேன்

வேறு என்ன நான் செய்ய
அவனைப்போல் நானும்……………….!!!!

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.