Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டன் நகரில் நடைபெறும் தமிழ் புத்தக கண்காட்சி!

லண்டன் நகரில் நடைபெறும் தமிழ் புத்தக கண்காட்சி!

7 minutes read

லண்டன் நகரில் தமிழ் புத்தக கண்காட்சி இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இங்கு பெருந்தொகையான ஈழத்தமிழ் நூல்கள் மற்றும் இந்திய தமிழ் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இங்கு ஈழத்து எழுத்தாளர் எஸ் பொன்னுத்துரை அவர்களின் நூல்கள்,கவிஞர் வைரமுத்து அவர்களின் நூல்கள் ,பேராசிரியர்களான கா .சிவத்தம்பி,க. கைலாசபதி ஆகியோரின் நூல்கள் ,எஸ் ராமகிருஷ்ணன் நூல்கள் ,பாலகுமாரன் நூல்கள் மற்றும் தந்தை பெரியாரின் நூல்கள் என பல நூல்கள் இங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இங்கு கண்காட்சியுடன் பல இலக்கிய நிகழ்வுகள் அமர்வுகளாக இங்கு இடம்பெற இருக்கின்றது.

அந்தவகையில் இங்கிலாந்து வாழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அமர்வு , சிவசேகரம் கவிதைகள் என்ற நூலின் அறிமுகமும் உரைகளும் இங்கு இடம்பெற இருக்கின்றது.மற்றும் வெந்து தணியாத பூமி ,ஆஸாதி ,நானும் நீதிபதியானேன் ஆகிய நூல்களின் சமூக அரசியல் முக்கியத்துவங்கள் பற்றிய உரைகழும் இடம்பெற இருக்கின்றது.

பல்வேறு இலக்கிய பிரமுகர்களை ஒரு இடத்தில் காணக்கூடிய ஒரு மிக முக்கிய கண்காட்சியாக இந்த கண்காட்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது .

லண்டனில் தொடராக இவ்வாறான புத்தக கண்காட்சி நடைபெற்று வருவது வரவேற்பிற்குரிய ஒரு விடயமே…

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022
Tamil Book Fair – London

சென்னை புத்தக கண்காட்சியில் வெளியான புதிய நூல்களுடன், இலங்கை, தமிழகம், புகலிட நூல்கள். 800க்கும் மேற்பட்ட தலைப்புகளில்……

Kerala House
671, Romford Road
Manor Park, Eastham
E12 5AD

நேரம் – 10am to 8pm

26 March 22
Saturday
10am to 8pm

உங்களை அழைக்கிறோம்!
உங்கள் வாசிப்புக்கும், தேடலுக்கும் எந்த நூல் தேவையோ எமக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தினால் ,கிடைக்க வழி செய்யலாம்!

தொடர்புகளுக்கு
Mob , Whatsup 07817262980
Email – eathuvarai@ gmail.com

புத்தகம், வாசிப்பு மீதான ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுடன் இந்த அறிவித்தலை பகிர்ந்து கொள்ளுங்கள்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More