1


இரவின் ஆடைகூட இன்றி
ஆத்மத்தில் விடுதலைத் தீ உண்டு
பொங்கும் மலையாய்
எழுந்தார்கள் கார்த்திகை மாந்தர்
சந்தனப் பேழைகளாய்த்
தமைச் சுமப்பர் என்றறிந்தும் சுதந்திர வேட்கையைச் சுமந்து
சுடராகித் தகித்தார்கள்
தாகம் விடுதலை ஒன்றென
ஓர்மக் குரலாய் அவரிருக்கும் நினைவில்
காலக் கடல் திரளாகும்
ஓர் நாளில்
அன்றந்த மாந்தர்
நெருப்பாய் நம் விருப்பாய் நுழையுண்டு
விடுதலை கீத மிசைப்பர்
அக்கணம் ஈழ நிலம் மீதிலோர்
மாவீர கீத மிசைக்கும்.
த.செல்வா
