செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அவனோர் கரிகாலன் | கேசுதன்

அவனோர் கரிகாலன் | கேசுதன்

0 minutes read

விழிகள் கருகாத கானகத்தே கண்ட
முத்தமிழ் வேங்கை – அவன்
செஞ்சிவந்த கண்ணூடே பிறந்த சிறுத்தை-அவன்
பெரும் படைகொண்டு கொடிகட்டி
கொலைமுகம் காட்டி பகைவன்
கொன்று குவித்த சோழப்படைத்தலைவன்-அவன்
மேல் ஆணை கட்டி கடல்தளம் பதித்து
சுடுமணல் சுட்டிட கொடிகட்டிக்
குலம்செழிக்க ஓங்கிய போர்முரசும்
புகழ்பாடும் செஞ்செழியனவன்
நெருப்போடு விளையாடிய
செந்தணல் வேங்கை நம்மினர்
சோழன் கரிகாலன் படையாய்
மண்னூடே குலம்காக்க சீறுகொண்ட
சிறுத்தையாய் செம்புனல் சீறி
கொலைக்களம் புகுந்த கரிகாலன்படை
இனமானம் காக்க புலிமகனாய்
விடமாலையணிந்து விடுதலை வீரனாய்
விண்ணுலகம் சென்ற வீரத்தாயின் உன்னத
உதிரமாய் உதித்த ஞானம் பெற்ற ஞாயிறும் அவனே
வெஞ்சமர் ஆடிட பகைமுன் அன்னைமண்
காக்க வீர நெஞ்சம் காட்டி நின்ற மறவன் படை மகான்
அவனோர் கரிகாலன்

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.