தமிழுக்கு என்றொரு தீரன் – நாம்
பார்த்து வியந்த கரிகாற் சோழன்
வேள்வித்தீயில் மூண்டெழுந்த
வேட்கையில் உருவான சூரன்
செங்கதிர் ஒளிர்த்தீயாகி
எழுந்த கதிரோன் – நம்
கரிகாலன்
முப்பெரு வம்சமாய் வந்துதித்த
சூரியப்புதல்வன்
எமனையும் எதிர்த்த கருங்காட்டு
வேங்கையவன்
தாய்மடி விலகி தமிழ் மண்ணுக்காய்
உயிர்த்தெழுந்த செந்தீயோன்
அடியோன் பாதம் தழுவிய – மா
பெரும் படைகள் செங்களம்
சிதறிட கரு வேங்கைகள்
உறுமிடும் கரிகாலன் நாமம்
சுடுகுக்குழல் சிவந்திட சீறி
பாயும் செங்கனல் வேங்கைகள்
திமிரோடு தீ மூட்டும் போர்க்களம் -அதை
வீறோடு வெற்றி முழங்கிடும்
தமிழர் தேசம்
தாகங்கள் தணிந்திடா
தன்னிகரில்லா தலைவன் – அவன்
எம் உயிரானவன்
ஈழம் ஈன்றாலும் இனிமேலும்
அவன்போல் புறநானூற்று தீரன்
எமக்கில்லை
கேசுதன்