Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கொரோனா – டெங்கு காய்ச்சல்: மாறுபடும் அறிகுறிகள்!

கொரோனா – டெங்கு காய்ச்சல்: மாறுபடும் அறிகுறிகள்!

2 minutes read

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா முடிவுக்கு வராத நிலையில் பருவ கால நோய்களும் பாதிப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கொரோனா மற்றும் டெங்கு ஆகிய இரண்டு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவது போல் தோன்றலாம். ஆனால் ஒருசில அறிகுறிகள் மாறுபடுகின்றன.

கொரோனாவில் இருந்து டெங்கு எவ்வாறு வேறுபடுகிறது?

  • வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்ள முடியாமை கொரோனா பாதிப்பின் அறிகுறியாகும். டெங்கு, அதுபோன்ற அறிகுறிகளை கொண்டிருப்பதில்லை.
  • சுவாச தொற்று நோயான கோவிட்-19 உடன் ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பின்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவது பொதுவானது. தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்படுவது டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக அமையலாம்.
  • காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, தொண்டை புண், வெண்படலம், தலைவலி, மூச்சுத் திணறல், மார்பு வலி போன்றவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாகும்.
  • ஆனால் கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சல் அப்படிப்பட்டதல்ல. டெங்குவின் தீவிரத்தைப் பொறுத்து லேசான டெங்கு காய்ச்சல், ரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு உண்டாகும். 10 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகள் நேரும்.

லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

மூட்டு மற்றும் தசை வலி, அதிக காய்ச்சல், உடலில் தடிப்பு ஏற்படுவது, அடிக்கடி வாந்தி எடுப்பது, கடுமையான தலைவலி போன்றவை லேசான டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம். முறையாக சிகிச்சை பெற்றால் இந்த அறிகுறிகள் ஒரு வாரத்தில் மறைந்துவிடும் .

ரத்தக்கசிவுடன் கூடிய காய்ச்சலின் அறிகுறிகள்

பல் ஈறுகள், மூக்கு, வாய் பகுதியில் ரத்தப்போக்கு, ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைவது, வயிற்றுப்போக்கு, வலிப்பு, சருமத்தில் சிறு சிறு தடிப்புகள் தோன்றுவது, வயிற்றுவலி, ஒவ்வாமை போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கும். முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உடல் நிலை மோசமடைந்துவிடும்.

டெங்கு சிண்ட்ரோம்

‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ எனப்படும் இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் ஆபத்தை அதிகப்படுத்தக் கூடியவை. குறைந்த ரத்த அழுத்தம், நாடி துடிப்பு அதிகரிப்பது அல்லது குறைவது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடுவது, மூளை வீக்கம் அடைவது, அதிக ரத்தப்போக்கு, காய்ச்சல் ஏற்படுவது, வாந்தி, கடுமையான வயிற்றுவலியை அனுபவிப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அது டெங்கு காய்ச்சல்தான் என்பதை உறுதிபடுத்தி விடலாம். நிலைமை மோசமாக இருந்தால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More